
நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!!!
விஜய் நடித்த வாரிசு படத்தில் துணிச்சலான மற்றும் சக்திவாய்ந்த முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம், உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் பாராட்டப்பட்டார். அவர் திரையில் தோன்றும் காட்சி மற்றும் உடல்மொழியை அனைத்து பார்வையாளர்களும் விரும்பினார்கள். அவர் கண்களைப் பயன்படுத்திய விதமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இதுபற்றி கணேஷிடம் கேட்டபோது,
"படத்தில் தொழில் அதிபராக நடித்ததால்,
நிஜ தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் பேசி பழக ஆர்வம் காட்டினார்கள். என்னை வேறு பரிமாணத்தில் பார்த்தார்கள், ஒரு நடிகராக அது எனக்கு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன் என்றார்.
பல மூத்த நடிகர்கள் படத்தில் இருந்தாலும், கணேஷ் தனது முத்திரையை பதித்துள்ளார். 2023-க்கு ஒரு சிறந்த தொடக்கமாக, அவர் மேலும் கூறுகிறார் :- "நான் தெ...