
நாட் ரீச்சபிள் ரேட்டிங்: 3/5
படம்: நாட் ரீச்சபிள்
நடிப்பு: விஸ்வா, சாய் தன்யா, காதல் சரவணன், பிர்லா போஸ்,
சுபா தேவராஜ்
தயாரிப்பு: கிராக் ப்ரைன் புரடக்ஷன்ஸ்
இசை: சரண்குமார்
ஒளிப்பதிவு: சுகுமாரன் சுந்தர்
இயக்கம்: சந்துரு முருகானந்தம்
பி ஆர் ஒ: பரணி, திரு
நகரில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். போலீஸ் அதிகாரி விஸ்வா கொலை காரனை தேடுகிறார். இதற்கிடையில் சாய் தன்யா மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையும் பெறு கிறார். ஊரெல்லாம் தேடியும் விஸ்வாவுக்கு கொலைகாரன் பற்றிய துப்பு கிடைக்காத நிலையில் வீடொன்றின் கண்ணாடியில் எழுத்தப்பட்ட சில வார்த்தைகளை க்ளுவாக எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடர்கிறார். அப்போது மாணவ, மாணவிகள் சிலர் காட்டுபகு...