
'நான் மிருகமாய் மாற' திரைப்பட ரேட்டிங்: 2/5
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
சினிமாவில் சவுண்டு இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார் ‘பூமிநாதன்’ என்ற சசிகுமார். இவரது தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் சட்டப்படி தண்டனை வாங்கித் தருவது நீதிமன்ற வழக்கப்படி முடியாது என்பதை உணரும் சசிகுமார், சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்து அவர்களைப் பழி வாங்குகிறார்.
இவர் செய்த பதிலடியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர் ஆபத்துகள் ஏற்படுகின்றன. யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து செய்த படுகொலைகளுக்கு சாட்சிகள் இருப்பதாகச் சொல்லும் புதிய வில்லன், சசிகுமாருக்கு புதிய அஸைண்மெண்ட்டை கொடுக்கிறான். அவன் சொன்னதை செய்யவில்லையென்றால் சசிகுமாரின் குடும்பத்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான். ...