
'பட்டத்து அரசன்' திரைப்பட ரேட்டிங்: 3/5
தேசிய விருது வென்ற இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன் இன்று வெளியாகி உள்ளது. அதர்வா நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே குருதி ஆட்டம் மற்றும் ட்ரிகர் படங்கள் வெளியான நிலையில் பட்டத்து அரசன் படமும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரன், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இறுதியில் அந்தக் குடும்பத்தின் மீதான பழியை அவர் துடைத்தாரா, இல்லையா என்பதுடன், ஒதுங்கியிருந்த தனது தாத்தா குடும்பத்துடன் அவர் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தார் என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ சொல்லும் திரைக்கதை.
கிராமத்து குடும்பக் கதையை அதன் மணம் மாறாமல் திரையில் பரிமாற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். உடன் கபடியை களமாக்கியிருக்கிறார். மண்சார...