
'பதான்' திரைப்பட ரேட்டிங்: 3.5/5
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது பதான் திரைப்படம். இந்த படம் புக்கிங் ஓபன் ஆன நிலையிலேயே பல கோடி ரூபாய் வசூலை பிரித்து மேய்ந்துள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகான ஷாருக்கானின் திரை அவதாரம் இது என்பதாலும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாலும் வெறித்தனாமாக புக்கிங் செய்துள்ளனர் ரசிகர்கள். ஹிந்தி திரையரங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களும் படத்துக்காக மிகப் பெரிய வரவேற்பைத் தந்திருக்கின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ஜீரோ திரைப்படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அவரது சினிமா வாழ்க்கையில் அமைந்தது. அதன்பிறகு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து கொடுக்கவேண்டும் என அவர் தாமதம் செய்தது, கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் 4 ஆண்டுகள் கழித...