பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் 'கோடீ'
திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோடீ' என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார். யுகாதி பண்டிகையான இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கோடீ' படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர்கள் 'கோடீ' எனும் படத்தின் தலைப்பை ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். டாலி தனஞ்செயாவின் வசீகரிக்கும் கண்களுடன் சுவாரசியமான அம்சங்களையும் இணைத்து, கதையின் தீவிரத்தையும், ஆழத்தையும் வெள...