
'பரோல்' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
நம் ஆழ் மனதில் சில கருத்துகள் தவறாக பதியும் என்பது மறுக்கத்தக்கது இல்லை. அதுபோல வடசென்னை என்றாலே ரவுடிஸம் என்று சினிமா காட்டியது, இந்த கருத்துக்கு எதிராக பல எதிர்க்கருத்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் சென்னையை மையமாக கொண்டு வெளியாகும் ரவுடிஸம் படத்தில் வடசென்னை கொண்டு வருவது வழக்கமாக மாறியுள்ளது. மீண்டும் வடசென்னை என்றாலே ரவுடிஸமா..? என்ற கேள்வியை உருவாக்கி வெளிவந்த 'பரோல்' திரைப்படத்தின் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அண்ணன் லிங்கா மற்றும் தம்பி கார்த்திக் இருவரும் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்ளும் அண்ணன் தம்பிகளாக உள்ளனர். லிங்கா முக்கிய குற்றவாளியாக சிறையில் உள்ளார், இவரது அம்மா எதிர்பாராத விதமாக இறந்துவிட தம்பி கார்த்திக் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பரோல் கிடைத்ததா? இல்லையா...