
"பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது.." - தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.
புது இயக்குநர்கள் ஆர்.கண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகை சுஹாசினி மணி ரத்னம்
*நான் வாழ்க்கையில் முக்கியமானவர் சுஹாசினி மேடம் தான்!
ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை என்றால் இப்படம் இல்லை!! – இயக்குநர் ஆர்.கண்ணன்*
*என் அம்மாவை கவனித்தப் பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்..
– நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*
இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்
"தி கிரேட் இந்தியன் கிச்சன்"
படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது..
நடிகை சுஹாசினி மணி ரத்னம் பேசும்போது,
இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன...