
பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'
தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம் 'ராவண கல்யாணம்'
பான் இந்திய படைப்பாக உருவாகும் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'
நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், ...