Friday, December 1
Shadow

Tag: பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

News
பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.     ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.  இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.  மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.  கைதி, அடங்க மறு,  சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவு...