Saturday, November 26
Shadow

Tag: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'பிரின்ஸ்' திரைப்பட ரேட்டிங்: 3/5 ’டாக்டர்’, ‘டான்’ என இரண்டு ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஹாட்ரிக் வெற்றி என்ற எதிர்பார்ப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகி இருக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? கடலூர் தேவனக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் அன்பு. அதே பள்ளியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெஸிகா ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர, அவரைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் அன்பு. சாதி, மதம் கடந்துதான் காதலிக்க வேண்டும் என மகனிடம் கடிதம் எழுதி உறுதி வாங்கிக்கொள்ளும் அளவுக்கு முற்போக்குவாதியான அதேசமயம் பிடிவாதம் கொண்ட தந்தை உலகநாதனாக சத்யராஜ். தந்தையின் ஆசைக்கேற்றவாறு ஜெஸிகா காதலியாக அமைந்தாலும் குறுக்கே இடையூறாக வந்து நிற்கிறது தந்தையின் தேசபக்தி. அன்புவின் அப்பாவிற்கு பிரிட்டிஷ்காரர்கள் என்றால் எப்ப...