போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ
சென்னை வளசரவாக்கம் ராதாகிருஷ்ணன் சாலையில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைந்துள்ளது ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ. திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் முக்கியமான டிஐ (DI), விஎஃப்எக்ஸ் (VFX), மிக்ஸ் (Mix), டப்பிங் (Dubbing) என்கிற நான்கு கட்ட பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய நவீன ஸ்டுடியோவாக இது உருவாகியுள்ளது. சுரேஷ், வெங்கடேஷ், சுந்தர் என மூன்று பேர் இணைந்து இந்த ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளனர்.
இதன் துவக்க விழாவிற்கு இயக்குனர்கள் பேரரசு, சுப்ரமணிய ஷிவா , மந்திர மூர்த்தி, கேபிள் சங்கர், வெங்கட், ஆர். கண்ணன், மீரா கதிரவன், இசையமைப்பாளர் சத்யா, நடிகர்கள் விவேக் பிரசன்னா, கவிதா பாரதி , தமன், விஜீத், நடிகை சனம் ஷெட்டி, தயாரிப்பாளர்கள் நந்தகோ...