Sunday, February 9
Shadow

Tag: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

Uncategorized
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் சார்பில் *SAY NO TO DRUGS, SAY YES TO SPORTS *என இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு விஜய் சேதுபதி மக்கள் இயக்கம் சார்பில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 24 அணியினர் கலந்து கொண்டனர். போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 , இரண்டாம் பரிசாக 30,000 , மூன்றாம் பரிசாக 15,000 மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. ...
News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் 'ஃபார்ஸி' வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.* இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப...
News
'தில் திலீப்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'தில் திலீப்' திரைப்படத்தின் முன்னோட்டம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'குபீர்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தில் திலீப்'. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்....
News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்” சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார். ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் ...
News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் S R பிரபாகரன் வெளியிட்ட “ஆதாரம்” திரைப்படத்தின் அதிரடி டீசர் ! ஹாலிவுட் பாணியில் தமிழில் ஒரு ஹெய்ஸ்ட் திரில்லர், வெளியானது ஆதாரம் படத்தின் அதிரடி டீசர் !! MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G.பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன் தயாரிப்பில், இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம் “ஆதாரம்”. இப்படத்தின் டீசரை திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் S R பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர். நம் கண் பார்க்கும் விசயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பாரத்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது. இந்த கருவை மையமாக கொண்டு நகை கடை...