
மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'
மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'- சவுதி அரேபியாவில் வெளியாகிறது.
‘அசுரன்’ படப்புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ- அரேபிய திரைப்படம் 'ஆயிஷா'. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு 'நடனப்புயல்' பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.
பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின் போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.. ‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் ப...