'மான் வேட்டை' திரைப்பட ரேட்டிங்:2/5
பெரிய பட்ஜெட் படங்கள்தான் இரண்டாவது பாகம் தயாரிக்க வேண்டுமா, சின்ன பட்ஜெட் படங்களால் முடியாதா..? என்று களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் திருமலை.
அதற்கு அவர் எழுதி இருக்கும் கதையும் சிறியதுதான்.
இளமை துடிப்புள்ள மூன்று இளம் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு தனிமையில் இருக்க சுற்றுலா செல்கிறார்கள். அங்கே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் டெண்டுகள் அடித்து தங்க, அந்த இடத்தில் மர்மமான முறையில் அமானுஷ்யத்தில் சிக்குகின்றனர்.
இளஞ்ஜோடிகள் என்பதால் அவர்களின் இளமை கொண்டாட்டத்தையும், அழகையும் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி விட்டு அவர்களுக்கு பிரச்சினை தருவது எது..? என்பதை இரண்டாம் பாகத்தில் விளக்குவதாக சொல்லி முதல் பாகம் முடிக்கிறார் அவர்.
காட்டுக்குள் செல்லும் இளஞ்ஜோடிகளுக்கு வழிகாட்டியாக சுமன் ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் அகால மரணம் அடைவது அத...