
"ராங்கி" திரைப்பட ரேட்டிங்:3/5
தனியார் ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வருகிறார் தையல் நாயகி (த்ரிஷா). அவரது அண்ணன் மகளை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழ, அது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார் தையல் நாயகி. போலி ஃபேஸ்புக் கணக்கு மூலமாக நடைபெறும் இந்த விவகாரம் ஒருகட்டத்தில் முடிவுற்றதாக நினைக்கும்போது, அது வெறொரு பாதையில் வெளிநாடு வரை நீள்கிறது. இறுதியில் இதற்கெல்லாம் யார் காரணம் என்பதுடன் அறியப்படாத காதல் ஒன்றை தையல் நாயகியின் வழியே சொல்லியிருக்கும் படம் தான் ‘ராங்கி’.
இயக்குநர் முருகதாஸ் கதையை படமாக்கியிருக்கிறார் ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன். படத்தின் மையச்சரடான காதலை அதற்கேயுண்டான அழுத்தத்தில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஈர்ப்பு. அதையொட்டி படம் பேச முயற்சித்திருக்கும் சர்வதேச அரசியலும், வளம் கொழிக்கும் நாடுகளை குறிவைத்து சுரண்டும்...