'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் தேங்க்ஸ் மீட்!
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இதன் தேங்க்ஸ் மீட் நடந்தது.
கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் அந்தக் கதைக்குத் தேவையான ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து 63 நாட்கள், இடையில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் இதன் படப்பிடிப்பை எடுத்து முடித்தோம். அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என லொகேஷனும் மாற்றி மாற்றி இயக்குநர் கார்த்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஹீரோயின் மேகா ஆகாஷூம் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார். கூல் சுரேஷ், பிரஷாந்த் என அனைவரும் எந்தவிதமான கஷ்டமும் பார்க்காம...