
'வரலாறு முக்கியம்' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
பெண்ணைக் காதலிக்க வைக்கும் ஓர் இளைஞனின் ‘உன்னதமான’, ‘உயர்வான’ போராட்டமே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஒன்லைன். கோயம்புத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கும் கோபால் (கே.எஸ்.ரவிக்குமார்) மகன் கார்த்தி (ஜீவா). வேலையில்லாமல் சுற்றித் திரியும் அவருக்கு முழுநேர வேலையே பெண்களை ‘ஸ்டாக்கிங்’ செய்வது. அதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும் கார்த்தியின் தெருவில் கேரள பெண் ஒருவர் குடியேற, அவரை ‘ஸ்டாக்கிங்’ செய்து காதலிக்கத்தொடங்குகிறார். இறுதியில் அவரை கரம்பிடித்தாரா? இல்லையா? என்ற மிகவும் புதுமையான கதைதான் ‘வரலாறு முக்கியம்’.
பாகவதர் காலம் தொட்டு எடுக்கப்பட்ட இந்தக் கதையை 2022-ம் ஆண்டிலும் படமாக்கியிருக்கும் இயக்குநரின் மன தைரியம் பாராட்டத்தக்கது. முன்பு கொண்டாட்டப்பட்ட இந்தக் கதைக்களத்திலிருந்து தமிழ் சினிமா விலகி ‘இனியும் ஸ்டாக்கிங்’கை ரொமான்டிசைஸ் செய்யக்கூ...