ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ். ஜே. சூர்யாவின் 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'
'எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச்சிறந்த படைப்பு -வதந்தி', 'ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ் ஜே சூர்யா' என இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யாவை ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக பாராட்டைத் தெரிவித்து வருகிறார்கள்.
டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ்...