விஷ்ணு மஞ்சுவின் காவிய சாகசம் தொடங்குகிறது
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ நியூசிலாந்து நாட்டில் தொடங்கியது
’கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது - நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் பிரமாண்ட வரலாற்று காவியமான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் இன்று தொடங்கியது.
தனது கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படப்பிடிப்பு தொடங்கியது குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று, 'கண்ணப்பா' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் போது, நியூசிலாந்தின் அழகிய நிலப்பரப்புகளில் ஒரு வாழ்நாள் சாகசம் வெளிப்படுவதைப் பார்த்து நான் பிரமித்து நிற்கிறேன். இந்த கனவு உருவாக்கப்பட்டு ஏழு ஆண்டு...