
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 400 கோடி ரூபாயை ஏமாற்றிய விவகாரம்: கல்லால் குழும நிறுவத்தைச் சேர்ந்த சரணவன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் கைது.பெட்டிகோ நிறுவனம் குற்றச்சாட்டு.
பெட்டிகோ நிறுவனம் குற்றச்சாட்டு
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை காட்டி முதலீட்டை கவர்தல்.. போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல உலக நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தில், பெட்டிக்கோ கமர்சியோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் கோடி கணக்கிலான ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. இந்த இரு நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையின் போ...