25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’
25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம்'
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் துல்கர் சல்மானின் 'சீதா ராமம்'
துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி - வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான 'சீதா ராமம்' உலகம் முழுவதும் வார இறுதி நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை 'சீதா ராமம்' பெற்றுள்ளது. இதுவரை 'சீதா ராமம்' உ...