A.R.Rahman compares The Goat Life to Lawrence of Arabia at the Exclusive Website Launch Event for the Prithviraj Sukumaran starrer The Goat Life
பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படத்திற்கான பிரத்யேக இணையதள வெளியீட்டு விழாவில் இந்தத் திரைப்படத்தை 'லாரன்ஸ் ஆஃப் அரேபியா' உடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டினார்!
அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தை, உலகளாவிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றப் படமான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ உடன் ஒப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியில் ஆழமான மறையாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் அதிகாரப்பூர்வ இணையதள வெளியீட்டு விழாவின் போதுதான் இந்த விஷயத்தை ரஹ்மான் கூறியுள்ளார். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ரஹ்மான் மேலும் பேசியதாவது, "'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம்...