Chinna Pulla Ne Video Album Song Release
தமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது.
சின்ன புள்ள நீ இசை தொகுப்பு விழாவில்
இயக்குனர் பவித்ரன் |
"சின்ன புள்ள நீ... "
மற்றும் மனதிலும் நீ... " ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாடலாசிரியர் சொற்கோ, இயக்குனர் பவித்ரன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு பாடல்களையும் எழுதி இசையமைத்து அதை படமாக்கி இயக்கிய தினகரனுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி இயக்குனர் பவித்ரன் பாராட்டி பேசுகையில் " இதில் நடித்து பாடல் எழுதி, இசையமைத்து, நடித்து தயாரித்து திரைப்படம் போல் உருவாக்கி உள்ள தினகரன் பாராட்டுக்குரியவர். தினகரன் கட்டுமஸ்தான உடலில் ஆணழகன் போல் உள்ளார். இந்த ஆல்பத்தில் அவருடைய நடிப்பு நன...