
Dhanush’s Telugu-Tamil bilingual Sir/Vaathi set to hit theatres on December 2
தனுஷ் நடிப்பில் தெலுங்கு/தமிழில் தயாராகி கொண்டிருக்கும் சார்/ வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு
பிரபல தயாரிப்பாளரான 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' சூர்யதேவர நாக வம்சி, ' ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்' சாய் சௌஜன்யாவுடன் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடித்துள்ளார். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகின்றனர். வெங்கி அட்லுரி எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றுகிறார். சம்யுக்தா மேனன் முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளியீட்டு நாளை இன்று அறிவித்திருந்தனர். மேலும் டிசம்பர் 2ம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். அந்த அறிவிப்பு புகைப்படத்தில், தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்...