
‘Diary’ Movie Review
'டைரி' திரைப்பட ரேட்டிங்: 3/5
பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார்.
அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் டைரி.
காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான பார்வை நிதான நடை ஆகியனவற்றைக் காதல் நேரத்திலும் கடைபிடிக்கிறார். வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்து அதில் தானும் ஒரு பாத்திரம் என்று அறியும்போதும், கடைசிக்காட்சியில் அம்மா பாசத்தில் தணிகை அழும்நேரத்திலும் கண்களாலேயே அவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்திப் பாராட்டுப்பெறுகிறார் அருள்நிதி.
காவல்துறை உதவிஆய்வாளராக வரும் நாயகி பவித்ராமாரிமுத்து நல்வரவு. எடுப்பும் மிடுக்குமாக இருக்கிறார...