Director Vetrimaran organises condolence meet for Late.Vetri Duraisamy on behalf of IIFC.
ஐஐஎப்சி சார்பில் மறைந்த வெற்றி துரைசாமியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.
இயக்குனர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்பட மற்றும் கலாச்சார ஆய்வகம்[IIFC] சார்பில் சமீபத்தில் மறைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்," கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளு...