போதை மருந்து என்னை சீரழைத்துவிட்டனர் பிரபல நடிகை பகீர் !!
மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டு, சில நாட்கள் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகப் பிரபல பாடகி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிராமி விருது பெற்ற பிரபல இங்கிலாந்து பாடகி டஃபி. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் திடீரென அவர் குறித்து எந்தவித தகவலும் இல்லாமல் இருந்தது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனிடையே அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அது தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதிவில், ''இதை எப்படி எழுதுவது என்று நான் பல முறை யோசித்துள்ளேன். தற்போது ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை. எனக்கு என்ன நடந்தது, ஏன் திடீரென காணாமல் போய்விட்டேன் எனப் பலரும் எண்ணலாம்.
ஒரு செய்தியாளர் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். ஆ...