
FULL VIDEO: Captain Movie Audio Launch
கேப்டன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்*
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது.
இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில்
ஒளிப்பதிவாளர் யுவா கூறியதாவது..,
இயக்குனர் சக்தி எப்பொழுதும் ஒரு புதுவித ஐடியாவுடன் தான் வருவார். அவரின் கற்பனை பிரமிப்பாக இருக்கும். ரசிகர்களுக்கு பிரமிப்பை தரும் ...