காட் ஃபாதர் – திரைவிமர்சனம் (பாசபோரட்டம்) Rank 3/5
தமிழ் சினிமாவில் சில சமயங்களில் நல்ல திரில்லர் படங்கள் வரும் அந்த வகையில் காட் பாதர் படமும் ஒரு நல்ல படம் என்று தான் சொல்லணும் ஹீரோ நட்டி வில்லன் லால் என்றதும் எதோ ரவுடி தாதா படம் என்று போனால் மிகவும் வித்தியாசமான பாசபோரட்ட படம் தான் காட் பாதர்.
இந்த படத்தில் நட்டி நடராஜ் நாயகனாக நாயகியாக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் அனன்யா வில்லனாக மலையாள நடிகர் லால் மற்றும் பலர் நடிப்பில் நவீன் ரவீந்திரன் இசையில் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஜகன் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் காட்பாதர்
சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் சாதுவான நட்ராஜ், எந்த பிரச்சனைக்கும் செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார்.
இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால், 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தன்...