
Witness Mega Swag Feast In Chiranjeevi –Salman Khan’s GodFather 1st Single Thaar Maar Released In Telugu, Hindi
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' பட சிங்கிள் ட்ராக் வெளியீடு
மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் இடம்பெற்ற ''தார் மார் தக்கரு மார்...' என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் 'தார் மார் தக்கரு மார்..' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடன கலைஞர்களுடன் நடனமாடுவது பிரமிப்பாகவும், ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. மெகா ஸ்டார்கள், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருவரும் தனித்துவமாகவும், ஒப்பற்ற வகையிலும் நடனமாடியிருப...