
imon K King strings together over 100 musicians around the globe for Vadhandhi Title Track
*உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தி வலைத்தொடருக்கு இசையமைத்த சைமன் K கிங்*
"கொலைகாரன்" மற்றும் "கபடதாரி" திரைப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் K கிங், அமேசான் பிரைம் த்ரில்லர் தொடரான " *வதந்தி* "க்காக மீண்டும் *கொலைகாரன்* திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார்.
சைமன் K கிங் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் *வதந்தி* வலைத்தொடரின் பின்னணி இசை மற்றும் டைட்டில் ட்ராக்கை பதிவு செய்தார். இதற்காக, 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தியின் முழு ஒலிப்பதிவுக்கும் இசையமைத்துள்ளார். வதந்தி, வலைத் தொடருக்காக பிரத்தியேகமாக ஒரு வகையான டைட்டில் ட்ராக் இயற்றியுள்ளார். இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கு கார்த்திக், பண்டைய தமிழ் இலக்கிய உரையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பாடகர் கு...