
Kannan Ravi Group Presents,Shanthnu Bhagyaraj’s Raavana Kottam First Look Launched
கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜ்ஜின் இராவணக் கோட்டம் படத்தின் முதல் பார்வை வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதன் ட்ரைய்லர் 'துணிவு' மற்றும் 'வாரிசு' திரைப்படங்களோடு 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும்
தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் அடுத்த படைப்பான 'இராவணக் கோட்டம்' படத்தில் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'மதயானை' கூட்டம் படப்புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜனவரி 10,2023) வெளியிடப்பட்டது.
கண்ணன் ரவி க்ரூப்பின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, "'இராவணக் கோட்டம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இதன் ட்ரைய்லர் அஜித் சாரின் 'துணிவு'...