Last 6 Hours Tamil Movie Review
'Last 6 Hours' திரைப்பட ரேட்டிங்: 2.5/5
பரத் நடிப்பில் வெளியான லாஸ்ட் 6 ஹவர்ஸ் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவரது நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.
இந்தப் படத்தில் பரத்துடன் அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடற்படையில் பணியாற்றிய ஷான் (பரத்) பார்வையிழந்தவர். மலைப் பகுதியில் தனிமையான சூழலில் அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசிக்கிறார். அவரது வீட்டில் கறுப்பு பணம் இருப்பதாக எண்ணி, அதை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் திட்டமிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. நள்ளிரவில் ஷானின் பங்களாவுக்குள் நுழையும் அவர்களுக்கு, அதிகாலை பால்காரர் வருவதற்குள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் செல்ல 6 மணிந...