
Lingesh plays the lead in College Road!
அன்று தமன்னாவோடு 'கல்லூரி' படத்தில் கதா நாயகனாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர்.
இன்று " காலேஜ் ரோடு " படத்தின் மூலம் கதா நாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்.
நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர்.
இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும்.
கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார்.
காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது .
ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார்.
மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர் .
ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்ட...