மீண்டும் ஒரு மரியாதை – திரைவிமர்சனம் Rank 2.5/5
கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு – அதாவது 1985ம் ஆண்டு ஆகஸ்ட் வெளியானது பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’. அப்போ ரிலீஸாகி தீபாவளியையும் தாண்டி 150 நாட்களைத் தாண்டி சக்கைப்போடு போட்டது. இத்தனைக்கும் ஆரம்பக் காலக் கட்டத்தில் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான் இயக்குநராகி கோலிவுட்டின் இமயமானவர் . இவர் இயக்கிய எத்தனையோ மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான முதல் மரியாதைக் குறித்து பலரும் ‘வயதான ஒருவருக்கு இளம் பெண் மீது வந்த காதலை அழகாக சொன்ன படம்’ என்று சொல்லி புளங்காகிதப்பட்டார்கள். ஆனால் தற்போது பாரதிராஜா, “ அந்த ‘முதல் மரியாதை’ படத்தில் நான் சொன்னது காதலை அல்ல. அதை யும் தாண்டியது. பேசிப் பழகி, ஈருடல் ஓருயிர் ஆவதுதான் காதல். அது ‘முதல் மரியாதை’ படத்தில் கிடையாது. காதலுக்கு எதிர்பார்ப்பு உண்டு. இருவரும் கைகோத்து நடக்க மாட்டோமா, கட்டிப் பிடிக்க மாட்டோமா என்று நினைப்பது காதல். அதையும் மீறி ஒன்று ...