
Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings, Pan India Film Announced
விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது
இந்தியா கடந்து உலகை திரும்பி பார்க்க வைத்த பான் இந்தியா திரைப்படம் “RRR” மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மற்றொரு பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். சரண் நடிக்கும் அடுத்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உப்பெண்ணா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இளம் இயக்குநர் புச்சி பாபு சனா ராம்சரணை இயக்குகிறார். பான் இந்தியா எண்டர்டெயின்ருக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட அட்டகாசமான திரைக்கதையை இயக்குனர் தயார் செய்துள்ளார்.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்க, விர...