
Music composer Ganesh Chandrasekaran has collaborated with National award-winner GV Prakash Kumar for a music video titled ‘Oh Penne’.
கணேஷ் சந்திரசேகரன் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'ஓ பெண்ணே 'ஆல்பம் பாடல்!
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ஆல்பம் பாடல்!
'ஓ பெண்ணே 'மியூசிக் ஆல்பத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடிக் கொடுத்த பாடல்!
சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் மியூசிக் வீடியோ.திரைப்பட ஊடகத்திற்கான எந்த வரையறைகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாக உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள் மேலை நாடுகளில் புகழ் பெற்று விட்டன. இம்முயற்சிகள் இங்கேயும் தொடங்கி ஒரு பக்கம் தொடர்ந்து வருகின்றன.
அப்படி ஒரு மியூசிக் ஆல்பமாக 'ஓ பெண்ணே ' என்கிற பெயரில் ஒரு படைப்பு உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்திற்கு , ஏற்கெனவே சில இசை முயற்சிகள் மூலம் பெயர் பெற்றவரும் எழுமின், வேட்டை நாய் படங்களின் இசை அமைப்பாளருமான கணேஷ் சந்திரசேகரன் வர...