
Nandamuri Balakrishna, Gopichand Malineni, Mythri Movie Makers #NBK107 Title To Be Revealed On October 21st
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு
வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனியின் இயக்கத்தில் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, அக்டோபர் 21ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'NBK 107' என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஆர் எஃப் சியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் தலைப்பு அக்டோபர் 21ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தி...