
Pooja of Yogi Babu starrer ‘Sannidhanam PO’ held at Sabarimala
சபரிமலையில் ‘சன்னிதானம் PO’ படத்தை கிளாப் அடித்து துவங்கிவைத்த விக்னேஷ் சிவன்
சபரிமலையில் நடைபெற்ற யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் PO’ படத்தின் பூஜை
சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் PO’ (Sannithanam PO). யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.
இந்த படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இ...