
Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Clocks 50 M+ Views, 1M+ Likes
*சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான 'ஹனு-மேன்' டீசர்*
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ' ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையை படைத்திருக்கிறது.
படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் 'ஹனு-மேன்'. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.
படத்தின் டீசர் தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனு-மேனின் அறிமுக...