டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது !!
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்...