
Sasikumar’s ‘Naan Mirugamai Maara’ all set to hit screens this November.
சசிகுமார் நடிப்பில் தயாராகும் 'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை.
மேலும் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஒலி பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும், என்று இயக்குனர் சத்ய சிவா தெரிவித்துள்ளார்.
படத்தின் வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.
சசிகுமார் அவர்கள், "இப்படத்தின் தலைப்பு, திரைக்கதைக்கு பொருத்தமாக இருக்கும். ஒரு சாதார...