
Yogi Babu’s new avatar as a Story, Screenplay and Dialogue Writer in his next film
கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கும் புதிய படம் துவக்கம் ; கதை திரைக்கதை வசனத்தையும் அவரே எழுதுகிறார்
முதன்முறையாக கதை திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் யோகிபாபு
கதை - வசனகர்த்தாவாக புதியமுகம் காட்டும் யோகிபாபு
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் செலக்டிவ்வான படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு.
இந்த நிலையில் நடிகர் என்பதை தாண்டி தற்போது புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்துள்ளார் யோகிபாபு. ஆம். தான் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் முதன்முறையாக தானே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி இருக்கிறார் யோகிபாபு.
வில் அம்பு’ படத்தை இயக்கிய இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை இயக்குகிறார். லெமன்லீஃப் கிரியேஷன் சார்பில் ஆர் கணேஷ் மூர்த்தி தயாரிப்பில் புரொடக்சன் NO-3 ஆக...