
Bringing 100 musicians together, Simon King decodes the beautiful fusion of local Tamil choir and the Budapest orchestra for the background music of Vadhandhi- The Fable of Velonie
நூறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'யின் பின்னணியிசை
'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'க்காக ஹங்கேரி நாட்டில் நூறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய பின்னணியிசை
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார்.
ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தொடரில் இடம்பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் பின்னணியிசை அமைந்திருக்கிறது. ப்ரைம் வீடியோவின்...