SS Rajamouli protégé Ashwin Gangaraju to direct magnum opus 1770 created by Ram Kamal Mukherjee.
பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770'
சர்வதேச எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜியின் பங்களிப்பில் உருவாகும் '1770 '
150 ஆண்டுகளான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கான புதிய மோஷன் போஸ்டரை வெளியிடும் ‘1770’ படக்குழு
வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்தம் மடம்’ நாவலைத் தழுவி தயாராகும் ‘1770’
சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார்.
பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து, ‘வந்தே மாதரம்’ என்ற பா...