
Superstar Rajinikanth kickstarts Y Gee Mahendra directorial and starrer film ‘Charukesi’ with clap
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்த ஒய் ஜி மகேந்திரா இயக்கி நடிக்கும் 'சாருகேசி' திரைப்படம்
என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி
ரஜினிகாந்த் தான் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்: ஒய் ஜி மகேந்திரா
நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில், "1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேன். இது எல்லாமே காலத்தின் செயல். நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யுஏஏ நாடகக்குழுவில...