
பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கூறும் படம் ‘சிவகாமி’ – ராதாரவி
மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ் வெளியிடுகிறது. தமிழில் வெளியாக தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா (27.02.2020) அன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி, உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:-
நடிகர், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் பேசும்போது,
என் நண்பன் சௌத்ரி முதன் முதலாக இந்த படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார். மறைந்த முன்னாள் ம...