Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN Postponed, New Release Date Soon
பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ' ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் 'ஹனு- மேன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளதைப் போல் ' ஹனு-மேன்' படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும்.
இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட...