
The Adipurush teaser – A 3D cinematic treat!
முப்பரிமான தொழில்நுட்பத்தில் அசத்தும் 'ஆதி புருஷ்' பட டீசர்
3டி தொழில்நுட்பத்தில் வெளியான 'ஆதி புருஷ்' பட டீசர்
ஆதி புருஷ்' படத்தின் டீசர், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி, பார்வையாளர்களுக்கு மிகப்பிரம்மாண்டமான காட்சி ரீதியிலான விருந்தை அளித்திருக்கிறது
இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் 'ஆதி புருஷ்' பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், 'ஆதி புருஷ்' தயாராகி இருக்கிறது.
உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், 'ஆதி புருஷ்' படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'ஆதி புருஷ்' படத்தின் தயாரிப்பாளர்கள...